சில்லுனு ஒரு மழைக்காலம் ...

எல்லாரும் இந்த 'சில்லுனு' அப்படினு ஒரு தலைப்பை பயன்படுத்துறாங்க .. சரி நானும் அதே தலைப்புல ஒரு பதிவு செய்றேன் ... நான்
தீபாவளிக்கு 6 நாள் விடுமுறை எடுத்து சந்தோசமாய் எடுத்த படங்களை பகிர்ந்துகொள்ளவே ... இந்த பதிவு .... மழை வந்தால் சென்னை மக்கள்
படும் அவதியிலிருந்து சற்று இளைப்பாற ... நம்ம ஊருக்கு போவோம் வாருங்கள்.....




மழை வர்ற மாதிரி வானம் கறுக்கும் பாருங்க... அப்படியே ஒரு இருட்டு .... திடீர்னு மணி 6 ஆன மதிரி .....

சரி மழை விட்ட உடனே .... சில நேரம் வெயிலும் லேசான தூரலும் சேர்ந்த்து வரும் .. அப்பத்தான் நரிக்கும் காக்காய்க்கும் கல்யாணம்னு
சொல்லுவாங்க...... சில சமயம் வெயில் அடிக்கும் .... அந்த வெயிலின் மஞ்சள் நிறம் ..... இதோ ....


அந்த மழை விட்டவுடனே ... செடியிலெல்லாம் அந்த மழைத்துளி இருக்கும் பாருங்க .. பாத்துகிட்டே இருக்கலாம் ....




இந்த மழை எல்லாம் நின்ன உடனே ... ஒரு கணக்கு போடுவோம் ... ஒரு ஒழவு (உழவு) மழை இருக்கும் .... இல்ல குட்டைல நல்லா தண்ணி
நிக்குது ... கொஞ்சம் அதிகமாவே இருக்கும் ... அதுக்கும் மேல ஒரு கணக்கு உண்டு... உரல்ல தண்ணி நம்பி நிறைய இருந்தா ... ஒரு ஒழவு மழை... நல்ல ஈரம் மண்ணுல இருந்தா டிராக்டருக்கு சொல்லி விதைக்கனும் ... .விதைப்பயிர் இல்லனா போய் வாங்கனும் ... விதைக்கலனாலும்
சும்மாவது உழவு ஓட்டி விடனும் .. இல்லனா களை அதிகம் ஆயிடும் .... சின்ன வயசுல அந்த டிராக்டர்ல சைடுல உகாந்துட்டு ஓட்டறதுனாலே
தனி பிரியம் ....

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போலாகுமா ???....

மீண்டும் நுழைகிறேன்

பல மாதங்கள் ஆகிவிட்டது ....... வலைப்பூவில் பதிவு செய்து... வலைப்பூ ஆரம்பிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வம் என்றாலும் ... பல முறை தயங்கியே ஆரம்பித்தேன் ....

அலுவலகம் மாறியது கூட ஒரு காரணம் ..புது அலுவலகத்தில் பல இணைய தளங்களுக்கு தீச்சுவர் தடை.. அதிலிருந்து நேரம் கிடைக்கும் போது என்னை வலைபூ உலகிற்கு இழுத்த வலைபூக்கள் - ப்ரியன்.. நிலவு நண்பன்.. விழியன் இனிய குழுமம் அன்புடன்.. இப்படி உலவுவதோடு சரி.. (அப்படி ஒன்னும் அதிக வேலைப்பளு இல்லை உண்மையைச் சொன்னால் என் சோம்பேறித்தனம்தான் காரணம்) .

இப்பொழுது வீடு மாறியாகி விட்டது ... வீட்டிலேயே இணைய இணைப்பு கொடுத்தாகிவிட்டது ... இனி கலர் கலராய் கலக்கலாம் (??) என்னும் நம்பிக்கையுடன் ... மீண்டும் நுழைகிறேன் ...

அன்புடன்
தனசேகர்...

அட சென்னையிலும் மழை !!!!

என் முதல் வலைப்பதிவை முடித்ததுவிட்டு .. அப்படியே வெளியே போய் டீ அடிக்கலாம் என போனால் . .. அட ... பலத்த காற்றுடன் நல்ல மழை !!!!

சென்னையை வாட்டிய வெய்யிலுக்கு இந்த மழை ஒரு பிரசாதம் . .

என்ன .. வருண பகவான் கூட என் பதிவை அதற்குள் படித்துவிட்டரா என்ன ????

அப்படியே மழையில் நனைய ஆசை இருந்தாலும் . . அலுவலகத்தில் இருக்கும் காரணதிற்க்காக . . ஓரமாய் நின்று மழைச்சாரலை . . சுவாசித்துவிட்டு வந்தேன் ... அடடா . .என்ன சுகம் !!!!!

என்றும் உங்கள்
தனசேகர்

கிராமத்துக் காற்று

அன்பு நண்பர்களுக்கு . . .
இதுவே என் முதல் தமிழ் வலைப்பதிவு ....
இயந்திர உலகில் இருக்கும் பலருக்கு கிராமத்திற்கு செல்வதே தனி சந்தோசம்தான். . . நானும் புத்தாண்டு விடுமுறைக்கு எங்கள் ஊர் வீரசோழபுரம் சென்று இருந்தேன் . . .
இரவு முழுவதும் கயிற்று கட்டிலில் சந்தோசமாக வானம் பார்த்து காற்று வாங்கிகொண்டு இருந்தேன் . . . அதுதான் சுததிந்தரக் காற்றோ ?

மேலும் ஒவ்வொரு முறையும் வீடு செல்லும்போது . . பேருந்தில் அமர்ந்து விடியற்காலையில் நெல் , கரும்பு தோட்டங்களின் நடுவே பயணிப்பதே தனி மகிழ்ச்சிதான். .. ..

இப்படி கடந்த முறை சென்றபொழுது ஒரு தோட்டம் பூராவும் . . சூரியகாந்தி மலர்கள் ஒரே மாதிரி சூரியனை பார்த்து மலர்ந்திருக்க ... அடடா . . . கையில் கேமரா இல்லமல் போயிற்று . .. . . .

கடந்த சனிக்கிழமை ஈரோட்டில் நல்ல மழை !!!! மழை விட்டவுடன் அந்தி மாலைப்பொழுதில் லேசான தூரல்களுடன் .. வயல்களி நடுவே. . பேருந்தில் பயணம் ...

மேலும் .. கறந்தவுடன் காய்ச்சி குடிக்கும் பசும்பால் .. அதிலிருந்து கட்டி தயிர் .. பார்த்தவுடன் தாவி குதூகலிக்கும் நாய் . . குறும்புதனமான கன்றுகுட்டி . . இன்னும் எத்தனை எத்தனை...

இந்த நினைவுகளோடு அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறேன் ..

என்றும் உங்கள்..
தனசேகர்.