அன்புடன் ஆண்டு விழா!

எனக்கு முதன்முதலில் யுனிகோடு தமிழின் சிறப்பை கற்றுக்கொடுத்த அன்புடன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

அனைவரும் ஒரு குடும்பமாக .. பல கலந்துரையாடல்கள் .. கட்டுரைகள்.. கவிதைகள்... என தகவல் சுரங்கம் அன்புடன்.

நம்ம தலை விக்கி தான் இந்த விழாத்தலைவர் ;)

( தலைவரல்லவா , ,அதான் அந்த சிறப்பு பட்டம் 'தலை' )

வாருங்கள் அன்புடன் விழாவில் கலந்துகொள்வோம் ;)

எப்படி இருந்த நான் ....

ஏதோ திருவாண்மியூர்ல கூட்டதோட கூட்டமா பசங்களோட சுத்திட்டு இருந்தேன் ...

காலைல மிர்ச்சி சுச்சி பேசி முடிச்சிட்டு போற நேரத்தில எழுந்து 11 மணி வரைக்கும் ரேடியோ கேட்டுட்டு கெளம்ப ஆரம்பிப்பேன். பொறுமையா கெளம்பி ஷேர் ஆட்டோ ... M5 .. .21H .. இப்படி எதாவது புடிச்சு சீட் கிடச்சாலும் இல்லனாலும் நம்ம காதுல FM ஐ மாட்டிகிட்டு கேட்டுகிட்டே அலுவலகத்திற்கு போவேன்...

அப்படியே காலத்தை ஒட்டிட்டு இருந்த என்னை திடீர்னு நம்ம தலைவர் அதாங்க PL கூப்பிட்டு... தம்பி ஒரு ஆன்சைட் வாய்ப்பு இருக்கு, இண்டர்வியூக்கு படின்னு சொன்னாரு.

அட இன்னும் இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கேன்னு மனச தேத்த்திகிட்டு களத்துல எறங்கிட்டேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி காபி பேஸ்ட் செஞ்சு கொடுத்து வச்ச விசா அப்ளிகேசனையும் மதிச்சு நமக்குனு அடுத்த வருசத்துல ஒரு தேதியையும் கொடுத்திருந்தாங்க.. அத தூசி தட்டி தேதிய மாத்தியும் கொடுத்துடாங்க.

விசா இண்டர்வியூவுக்கு போற அன்னிக்கு இன்னொரு கூத்து நடந்தது... சனிக்கிழமை காலைல 9.30 ம்ணிக்கு. நம்மதான் சனிக்கிழமைனா 12 மணி வரைக்கும் தூங்குவோமே!!! அலாரம் வெச்சுட்டு தூங்கினா அலாரம் அடிச்சதே தெரியல...

ஏதொ நம்மள பத்தி வீட்டுக்கு தெரிஞ்சிருந்த்தால போன் போட்டு எழுப்பி விட்டாங்க. எழுந்து பாத்தா மணி 8.30!. என்ன நேரம் ஆயிடுச்சேனு பதட்டப்பட்டாங்க. நம்ம அத காமிக்காம, 'ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்ப கெளம்புனா சரியா இருக்கும்' னு சமாளிச்சிட்டு அவசர அவசரமா வழக்கம்போல கெளம்பி ஆட்டோக்கு நூறு ரூபா கொடுத்து போய் ஜெமினி பாலத்துல (இங்கதான் தூதரகம் இருக்கு. எனக்கும் அன்னிக்குதான் தெரியும் ;) ) எறங்கிப் பார்த்தா மணி 9.15! அப்பதான் கவனிச்சேன் .. அடையாள அட்டைய மற்ந்துட்டேன். அலுவலகத்துல வேற அடையாள அட்டைய எடுத்துட்டு போ.. இல்லேன்னா அங்க கேள்வியா கேட்டு தொலைபாங்க. பிரச்சனை ஆயிப்போயிடும்னு சொல்லி வெச்சுட்டாங்க.

உடனே ரூமுக்கு போன் பண்ணி பசங்களை எழுப்பி உடனே ஐ.டி. கார்டு எடுத்துட்டு வாடா மச்சினு சொன்னேன். அவனும் முகம் கூட கழுவாம அப்படியே அவசரமா வந்து வரிசைல நின்ன எனக்கு கொடுத்து அனுப்பி வெச்சான்.

விசா இண்டர்வியூவையும் சொல்லிக்கொடுத்த மாதிரி ஒப்பிச்சு முடிச்சிட்டு வந்தேன். அப்படியே client interivewவையும் ஒரு வழியா முடிச்சேன்.

திடீர்னு, 'தம்பி அடுத்த வாரம் டிசம்பர் 31ந்தேதி கெளம்பனும் தயார் ஆகு' ன்னு தலைவர் சொல்லிட்டார். அப்படியே அங்க இங்க எல்லா மக்களுக்கும் அண்ணன் அடுத்த வாரம் நியூ யார்க் போறேன்னு விளம்பரத்த கொடுத்துட்டு தயார் ஆனேன்.

நிறைய வாங்க வேணுமே .. நம்மகிட்ட வண்டியும் இல்ல. சரி அதான் நம்ம பசங்க இருக்காங்களே. கம்பனிக்காக உழைச்சுகிட்டு இருந்த பசங்களைக் கூப்பிட்டேன். டே வேலை இருக்குடான்னு சொன்னவங்கள முதல்ல கூப்பிட்டுகிட்டு (வேலை செய்யிறவனைத்தான் நம்ம விட மாட்டோமே!) அங்க இங்க போய் எல்லாத்தயும் வாங்கி கொண்டு வந்து சேர்த்துட்ட்டோம். சரியா சொல்லனும்னா சேர்த்துட்டாங்க :).

அதுக்கும் மேல எல்லம் வாங்கியாச்சானு ஒரு லிஸ்ட் போட்டு சரி பார்த்து அத பெட்டியில பேக் பண்ணி எந்தப் பொருள் எங்க இருக்குதுனு ஒரு பட்டியலும் போட்டு ரெடி பண்ணிட்டாங்க.

ஏதோ தனியா போகனுமேன்னு யோசிசிட்டு இருந்தப்ப நல்ல வேலையா டீம்ல இன்னொருத்தரும் வந்தார். ரெண்டு வாரம் முன்னாடி ஒருத்தர் கெளம்புனார். அவர வீடு எல்லம் பாக்க சொல்லிட்டோம்.

நான் கெளம்பறதுக்கு ஒரு கூட்டமே வேலை பார்த்தது... எப்படியோ புது வருசத்துல இருந்து உன் தொல்லை ஒழிஞ்சதுடான்னு எல்லாரும் வந்து எமிரேட்ல ஏத்தி விட்டுட்டாங்க ;)

இதை மீண்டும் தொடர்கிறேன் .... இனி நியுயார்க் நகரமாக .....;)