இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...

இனிப்புகளோடு இனிமையாகக் கொண்டாடுவோம் :)

தனசேகர்

நியுயார்க் நகரம் 3 : இந்தியர்கள் ஏன் இன்னும் இப்படி இருக்கிறோம் ??

இது நான் கேட்கும் கேள்வியல்ல .. என்னி(நம்மி)டம் ஒரு வெளிநாட்டுக்காரரால் கேட்கப்பட்ட கேள்வி. என்னால் தகுந்த பதில் அளிக்க முடியவில்லை, காரணம் அடவர் கேட்டதில் ஒரு உண்மை இருப்பதாகவே தோன்றியது. என்ன கேள்வி ?? நிகழ்வுகளை விரிவாக விவரிக்கிறேன்.

கடந்த வாரம் புதன்கிழமை மாலை ஒரு எட்டு மணி இருக்கும். அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்தது. நண்பர் ஒருவர் வெளியே சென்று தம் அடிக்க அழைக்க, நாங்கள் மூன்று பேரும் நியூ யார்க்கின் ராக்கஃபெல்லர் சென்டர் (எங்கள் அலுவலகம்) வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நங்கள் மூவருமே (இந்தியர்கள்) தமிழர்கள்.


எங்களை நோக்கி வந்த வெளிநாட்டு நபர் ஒருவர் வந்து எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். அப்படியே ஆங்கிலத்தில் கீழே.


He: hi guys .. I have a question for you . Which is the second largest economy of the world ?

we: Is it china ??

He: No. Its Japan. You know , some 20-30 years back when Americans fly to Japan for business talks, Japanese will record the talks inside the plan, interpreted them as soon as arrived to study about the visitor to be ready to face and get the business. But I have seen you all Indians are not socializing with any other nationalities. Why you are ??

We : really answer less :(

He: Its a globalized world. India with such a huge population and wealth, you guys have to socialize to improve the economy. I have asked the same question to a friend who is an Indian, He replied asking me back, do you ever seen a lion mingled with any other ?? :) Why he chosen lion and not any other animal ?

we: Because Lion is king of forest .. :)

He: Think of it guys, and I have one more question to be answered. Why Indian women are not straight ?

We: U mean ?

He: Why they always go with Indian men and not mingling with any other nationalities ?

We: Its a culture followed for years ..

He: No.. I have to find a real reason for it. Thank you guys .. good night .

இந்த கேள்வி மிகச் சாதரனமாகத் தோன்றினாலும், நாம் ஒவ்வொருவரும் யோசித்து விடை கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி !!

யாரவது தக்க காரணம் இருந்தால் அலசுங்கள் :)

நியுயார்க் நகரம் 2 : நயாகரா சுற்றுலா ,,,

நயகரா போயிட்டு வந்து ரொம்ப நாளு ஆயிடுச்சு .. ஆனா வழக்கம்போல சோம்பேறித்தனம் .. பதிவு எழுத ;)


இந்தப் பயணம் - கல்லூரி , சென்னையில் அலுவலக நண்பர்கள் என ஒரு சந்திப்பாகவே அமைந்தது. (இங்க வந்து ஒரு re-union . கொஞ்சம் ஓவர்தான் ;)


மொத்தமா கூட்டத்த சேத்திட்டு எத்தனை பேருணு பார்த்தா 12 பேர்!!! யப்பா சாமி வாடகைக்கு வேன் தான் எடுக்கனும்னு பார்த்தா ஓட்டறதுக்கு ஆளு இல்ல. எல்லாம் புது டிரைவர்கள். இந்த ஊருல டெஸ்ட் எழுதி, நம்ம ஊரு லைசன்ஸ் காமிச்ச உடனே ஒரு லைசன்ஸ் கொடுத்துட்டாங்க. ( அதை காமிச்சு மக்கள வெறுப்பேத்தியது தனி கதை ;) ) அதுனால நம்மள நம்பி வண்டி ஏற ஆளு இல்ல ;) .

சைனா பஸ் இங்கிருந்து போகுதுன்னு கேள்விப்பட்டு டிக்கட் பதிவு பண்ணிட்டோம். பயணம் நன்றாகவே இருந்தது ஆனால் 9 மணி நேரம் பயணம் செய்து 3 மணி நேரம்தான் நயாகராவைப் பார்க்க முடிந்த்தது.

சரி நான் இந்த பதிவு எழுதியதின் முக்கிய நோக்கம் நயாகராவைப்பற்றி எழுதுவது அல்ல, அந்தப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை எழுதவே. நான் இங்கு எதைப் பார்த்தாலும் நம் ஊரோடு தான் ஒப்பிடத் தோன்றுகிறது. அடிப்படையில் இங்கு உள்ள அனைத்தையும் அப்படியே நம் நாட்டில் எதிர் பார்ப்பதோ , ஒப்பிடுவதோ தவறு. இங்கு உள்ளதைப் பார்த்து நம் நாட்டில் எப்படி மாற்றலாம், மேம்படுத்தலாம் எனும் நோக்கத்தோடுதான் பார்ப்பதே சரி.

நயாகரா அருவி போல நம் நாட்டிலும் பெரிய அருவிகள் இருக்கிறது. கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி அருவி ஒரு எடுத்துக்காட்டு.. கீழே உள்ள படம அதிரப்பள்ளி .



ஒப்பிட்டு பார்க்க நயாகரா ..


இன்னும் எழுத ஆசை .. எழுதி முடிக்க வருசமாயிடும் ;) அதனால் இது பாதி(வு) ..

நானும் தமிழ்99 இ-கலப்பைக்கு மாறிவிட்டேன். ;) அடுத்த பதிவு முழுதும் தமிழ்99ல் ...

சிவாஜி - இவ்வளவு புகழுக்கு தகுதியுடையதா ?

அநேகமாய் பல புள்ளி விவரங்கள் .. சாதனைகளாக மாற்றப்பட்டாகிவிட்டது .. சிவாஜிக்கு. எல்லாம் மீடியா , இணையம் , நம் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் காரணம் இவை தான். படமும் typical ரஜினி படம் தான். இன்னும் நாம் எதிர்பார்ப்புகள் வைத்து ஏமாந்த்ததிற்குக் காரணம் சங்கர். அவரும் அவர் பங்குக்கு சுஜாதாவின் உதவியுடன் சி.பி.ஆர். , system software architecht, self destructive program என்பதை எல்லாம் தமிழ் உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொல்ல வரும் கருத்து எனப்பார்த்தால் கடைசியாய் வரும் money card. சங்கரின் பிரம்மாண்டத்திற்கு கண்ணாடி செட்டிங், ரஜினியின் மேக்கப். அந்த 250 கோடி என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ இல்லையோ மென்பொருளாளர்கள் என்றால் வீட்டு வாடகை முதல் ஆட்டோக் கட்டணம் வரை இனி பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே மிக அதிகம்;(


1. முதலில் வியாபாரம். ஏ.வி.எம். நிறுவனத்தாருக்கு நன்றாகவே தூக்கம் வந்திருக்கும் என நினைக்கிறேன். வெளியீடு தள்ளிப்போன நாட்களைத்தவிர ;)


2. மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்த படம். அதற்கு காரணமே ரஜினி , சங்கர் என்ற பின் பலம்தான். அவர்களுக்காக படம் ஓடும் என்ற அசராத நம்பிக்கை!


3. உலக அளவில் அரங்கு நிறைவு காட்சிகள். இதற்கு முக்கியக் காரணம் நம் தமிழ் மக்கள் உலகம் முழுதும் பரவி இருப்பது, மீடியா , இணையம் போன்றவை. நானும் என் பங்குக்கு 1 வாரம் கழித்து(வெளியான முதல் சில தினங்கள் டிக்கட் கிடைக்கவில்லை) 1 மைல் தூரத்தில் இருக்கும் திரையரங்குக்குச் சென்று நன்றாக ரஜினியை நக்கலடித்துவிட்டு வந்தேன். நம்ம ஊரில் செய்தால் கட்டுகளோடுதான் வீடு திரும்பியிருக்க வேண்டும் :) .

இதனால் தமிழ் சினிமா உலக அளவில் புகழ் பெறத்துவங்கி விட்டதா ?? கதை , தரம் எனப்பார்க்கும்போது இல்லை என்பதே பதில். வியாபார நோக்கம் , புகழ் எனப் பார்க்கும்போது இன்னும் சில முன்னேற்றம் தேவை.

விளம்பரப்படுத்தி hype உருவாக்கி இருப்பது நல்ல வியாபார நோக்கம். பல நூறு திரையரங்குகளில் வெளியிட்டு சில தினங்களில் பணம் பண்ணியது சாதுர்யம்.

முக்கியமாக திரை அரங்குகளில் படத்தை ஆங்கிலத் துணைத்தலைப்புடன் (English Subtitle) வெளியிட்டிருந்தால் தமிழ் தெரியாதவரும் வந்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதுவே நான் பார்க்க வராததற்குக் காரனம் என என்னுடன் வேலை செய்யும் ஒரு வட இந்திய நண்பர் சொன்னார். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! பெரும்பாலான வட நாட்டினர் நம்மைக் கீழ்த்தரமாகவே எண்ணுகின்றனர். அது ஒரு தனிச் சண்டை. இணையத்தில இந்தி-தமிழ் , ரஜினி-அமிதாப் என ஒப்பிட்டு எதிர் விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கிறது.வெளிநாடுகளில் வெளியிடப்படும் இந்தித் திரைப்படங்கள் எல்லாம் ஆங்கிலத் துணை எழுத்துக்களோடுதான் வருகிறது. பாலிவுட் திரைப்படங்கள் ஐரோப்பவிலும் , பிற நாடுகளிலும் புகழடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

துணைத்தலைப்பு இல்லாமை போன்ற சிற்சில குறைகளைத்தவிர சிவாஜி புகழையும் , இலாபத்தையும் ஈட்டிய ஒரு படம்.

இந்தக் குறைகளை நீக்கி , சிவாஜியின் விளம்பர , வியாபார யுக்தியைப் பயன்படுத்தினால் தசாவதாரம் நம் சினிமாவை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என நம்பலாம்.

ச்சும்மா கொஞ்சம் கடி !!!

வெள்ளிக்கிழமையும் அதுமா வீட்டுக்கு வந்து மெயில் பாக்ஸ் பாத்தா ஒரு மொக்கை கடி !! சரி .. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு காபி பேஸ்ட் பண்ணிடேன். சிரித்து மகிழுங்கள்!!

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .


- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?


- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .


பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் , ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் , லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!


டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் . இதுதான் உலகம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் . சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? யோசிக்கனும்...!!


தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம்

2: ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம்


3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் , ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம்

5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)


தத்துவம் 6: லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ... சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது , கடன் வாங்கித்தான் ஆகனும். கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா ?



பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம்


T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .


இளநீர்லயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .


உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் , ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .


ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .


வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ? இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.


சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறதுபிளானிங்கா ?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் , Rewindலாம் பண்ண முடியாது .

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்? "Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

மத்திய பூங்காவிற்கு ஒரு மதிய நடை

நானும் நியுயார்க் வந்து மாசம் நான்கு ஆகி விட்டது. ஊரில் யார்கிட்ட பேசினாலும் கேக்கும் முதல் கேள்வி - எங்க எல்லாம் சுத்தி பார்த்த ??

நான் இன்னும் இந்த டாலருக்கு 42 ரூபா (அப்ப 44 .. இப்ப கொறஞ்சு போச்சு ;-( ) கணக்கு போடறதயே இன்னும் மறக்க முடியல. இங்க எங்க போனாலும் காசு கேக்கிறாங்க!!. அப்புறம் எங்க போறது ??

நியுயார்க்னா உடன் நினைவிற்கு வரும் times square தான் தினமும் செல்லும் வழி ;-) அந்த ஒரு சந்தோசத்திலேயே நாலு மாசம் ஓடிடுச்சு.

நேத்து மதியம் வழக்கம்போல சாப்பிட்டுட்டு அரை மயக்கத்துல உட்காந்துட்டு இருந்தேன். பக்கத்துல இருந்தவர் வா ஒரு நடை போய்ட்டு வரலாம்னு கூப்பிட்டார். உடனே கிளம்பி ரோடுக்கு வந்தா எங்க பார்த்தாலும் மக்கள் கூட்டம். நம்ம தி. நகர் ரங்கநாதன் தெரு மாதிரி!!. அப்படியே நடந்து ஒரு எட்டு தெரு தாண்டினா மத்திய பூங்கா!!(Central Park - Manhattan).

இதோ அங்கு பிடித்த படங்கள்... கொஞ்சம் துலிப் மலர்களுடன் (அதாங்க அந்நியன் படத்தில் வருமே அந்த மலர் மட்டும்- இடம் அல்ல)











மிருக காட்சி சாலை நுழைவு வாயில்

அடுத்து இந்த மாசக்கடைசியில தான் நயாகரா போக திட்டம் ;-) பார்த்து விட்டு கதை சொல்கிறேன் ;-)

ஜனாதிபதி விருது பெறும் வீரசோழபுரம்

அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!!

நமது (எங்கள் எனச்சொல்ல வரவில்லை;) ) கிராமம் வீரசோழபுரம் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு கிராமமாக ஜனாதிபதி விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது !!!

மத்திய அரசில் இருந்து அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து இந்த விருதுக்கு தேர்வு செய்து உள்ளார்கள்.

இதில் நான் சந்தோசப்பட மேலும் ஒரு முக்கியக் காரணம் 35 வருடங்களுக்கும் மேலாக பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வரும் திரு.பாலசுப்பிரமணியம் & திருமதி. வள்ளியாத்தாள் - என் தந்தையும் தாயும். 1968 முதல் என் தந்தை. 1996 - 2006 வரை என் தாய் (அப்பொழுது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது). மீண்டும் தற்பொழுது என் தந்தை.

இது கிராம மக்களுக்கு கிடைத்த வெற்றி !!! இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதில் மிக்வும் பெருமைப்படுகிறேன்.

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

நம்ம அன்புடனின் ஆண்டு விழவுக்காக போட்டிகள் தயார்... எல்லாரும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம் ... ;) விவரங்கள் விழாத்தலைவர் விக்கியின் மொழியில் இதோ...

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-


எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி

படம் : 01



படம் : 02



படம் : 03



படம் : 04




படம் : 05



படம் : 06



படம் : 07



படம் : 08



படம் : 09



படம் : 10

அன்புடன் ஆண்டு விழா!

எனக்கு முதன்முதலில் யுனிகோடு தமிழின் சிறப்பை கற்றுக்கொடுத்த அன்புடன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

அனைவரும் ஒரு குடும்பமாக .. பல கலந்துரையாடல்கள் .. கட்டுரைகள்.. கவிதைகள்... என தகவல் சுரங்கம் அன்புடன்.

நம்ம தலை விக்கி தான் இந்த விழாத்தலைவர் ;)

( தலைவரல்லவா , ,அதான் அந்த சிறப்பு பட்டம் 'தலை' )

வாருங்கள் அன்புடன் விழாவில் கலந்துகொள்வோம் ;)

எப்படி இருந்த நான் ....

ஏதோ திருவாண்மியூர்ல கூட்டதோட கூட்டமா பசங்களோட சுத்திட்டு இருந்தேன் ...

காலைல மிர்ச்சி சுச்சி பேசி முடிச்சிட்டு போற நேரத்தில எழுந்து 11 மணி வரைக்கும் ரேடியோ கேட்டுட்டு கெளம்ப ஆரம்பிப்பேன். பொறுமையா கெளம்பி ஷேர் ஆட்டோ ... M5 .. .21H .. இப்படி எதாவது புடிச்சு சீட் கிடச்சாலும் இல்லனாலும் நம்ம காதுல FM ஐ மாட்டிகிட்டு கேட்டுகிட்டே அலுவலகத்திற்கு போவேன்...

அப்படியே காலத்தை ஒட்டிட்டு இருந்த என்னை திடீர்னு நம்ம தலைவர் அதாங்க PL கூப்பிட்டு... தம்பி ஒரு ஆன்சைட் வாய்ப்பு இருக்கு, இண்டர்வியூக்கு படின்னு சொன்னாரு.

அட இன்னும் இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கேன்னு மனச தேத்த்திகிட்டு களத்துல எறங்கிட்டேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி காபி பேஸ்ட் செஞ்சு கொடுத்து வச்ச விசா அப்ளிகேசனையும் மதிச்சு நமக்குனு அடுத்த வருசத்துல ஒரு தேதியையும் கொடுத்திருந்தாங்க.. அத தூசி தட்டி தேதிய மாத்தியும் கொடுத்துடாங்க.

விசா இண்டர்வியூவுக்கு போற அன்னிக்கு இன்னொரு கூத்து நடந்தது... சனிக்கிழமை காலைல 9.30 ம்ணிக்கு. நம்மதான் சனிக்கிழமைனா 12 மணி வரைக்கும் தூங்குவோமே!!! அலாரம் வெச்சுட்டு தூங்கினா அலாரம் அடிச்சதே தெரியல...

ஏதொ நம்மள பத்தி வீட்டுக்கு தெரிஞ்சிருந்த்தால போன் போட்டு எழுப்பி விட்டாங்க. எழுந்து பாத்தா மணி 8.30!. என்ன நேரம் ஆயிடுச்சேனு பதட்டப்பட்டாங்க. நம்ம அத காமிக்காம, 'ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்ப கெளம்புனா சரியா இருக்கும்' னு சமாளிச்சிட்டு அவசர அவசரமா வழக்கம்போல கெளம்பி ஆட்டோக்கு நூறு ரூபா கொடுத்து போய் ஜெமினி பாலத்துல (இங்கதான் தூதரகம் இருக்கு. எனக்கும் அன்னிக்குதான் தெரியும் ;) ) எறங்கிப் பார்த்தா மணி 9.15! அப்பதான் கவனிச்சேன் .. அடையாள அட்டைய மற்ந்துட்டேன். அலுவலகத்துல வேற அடையாள அட்டைய எடுத்துட்டு போ.. இல்லேன்னா அங்க கேள்வியா கேட்டு தொலைபாங்க. பிரச்சனை ஆயிப்போயிடும்னு சொல்லி வெச்சுட்டாங்க.

உடனே ரூமுக்கு போன் பண்ணி பசங்களை எழுப்பி உடனே ஐ.டி. கார்டு எடுத்துட்டு வாடா மச்சினு சொன்னேன். அவனும் முகம் கூட கழுவாம அப்படியே அவசரமா வந்து வரிசைல நின்ன எனக்கு கொடுத்து அனுப்பி வெச்சான்.

விசா இண்டர்வியூவையும் சொல்லிக்கொடுத்த மாதிரி ஒப்பிச்சு முடிச்சிட்டு வந்தேன். அப்படியே client interivewவையும் ஒரு வழியா முடிச்சேன்.

திடீர்னு, 'தம்பி அடுத்த வாரம் டிசம்பர் 31ந்தேதி கெளம்பனும் தயார் ஆகு' ன்னு தலைவர் சொல்லிட்டார். அப்படியே அங்க இங்க எல்லா மக்களுக்கும் அண்ணன் அடுத்த வாரம் நியூ யார்க் போறேன்னு விளம்பரத்த கொடுத்துட்டு தயார் ஆனேன்.

நிறைய வாங்க வேணுமே .. நம்மகிட்ட வண்டியும் இல்ல. சரி அதான் நம்ம பசங்க இருக்காங்களே. கம்பனிக்காக உழைச்சுகிட்டு இருந்த பசங்களைக் கூப்பிட்டேன். டே வேலை இருக்குடான்னு சொன்னவங்கள முதல்ல கூப்பிட்டுகிட்டு (வேலை செய்யிறவனைத்தான் நம்ம விட மாட்டோமே!) அங்க இங்க போய் எல்லாத்தயும் வாங்கி கொண்டு வந்து சேர்த்துட்ட்டோம். சரியா சொல்லனும்னா சேர்த்துட்டாங்க :).

அதுக்கும் மேல எல்லம் வாங்கியாச்சானு ஒரு லிஸ்ட் போட்டு சரி பார்த்து அத பெட்டியில பேக் பண்ணி எந்தப் பொருள் எங்க இருக்குதுனு ஒரு பட்டியலும் போட்டு ரெடி பண்ணிட்டாங்க.

ஏதோ தனியா போகனுமேன்னு யோசிசிட்டு இருந்தப்ப நல்ல வேலையா டீம்ல இன்னொருத்தரும் வந்தார். ரெண்டு வாரம் முன்னாடி ஒருத்தர் கெளம்புனார். அவர வீடு எல்லம் பாக்க சொல்லிட்டோம்.

நான் கெளம்பறதுக்கு ஒரு கூட்டமே வேலை பார்த்தது... எப்படியோ புது வருசத்துல இருந்து உன் தொல்லை ஒழிஞ்சதுடான்னு எல்லாரும் வந்து எமிரேட்ல ஏத்தி விட்டுட்டாங்க ;)

இதை மீண்டும் தொடர்கிறேன் .... இனி நியுயார்க் நகரமாக .....;)