நியுயார்க் நகரம் 2 : நயாகரா சுற்றுலா ,,,

நயகரா போயிட்டு வந்து ரொம்ப நாளு ஆயிடுச்சு .. ஆனா வழக்கம்போல சோம்பேறித்தனம் .. பதிவு எழுத ;)


இந்தப் பயணம் - கல்லூரி , சென்னையில் அலுவலக நண்பர்கள் என ஒரு சந்திப்பாகவே அமைந்தது. (இங்க வந்து ஒரு re-union . கொஞ்சம் ஓவர்தான் ;)


மொத்தமா கூட்டத்த சேத்திட்டு எத்தனை பேருணு பார்த்தா 12 பேர்!!! யப்பா சாமி வாடகைக்கு வேன் தான் எடுக்கனும்னு பார்த்தா ஓட்டறதுக்கு ஆளு இல்ல. எல்லாம் புது டிரைவர்கள். இந்த ஊருல டெஸ்ட் எழுதி, நம்ம ஊரு லைசன்ஸ் காமிச்ச உடனே ஒரு லைசன்ஸ் கொடுத்துட்டாங்க. ( அதை காமிச்சு மக்கள வெறுப்பேத்தியது தனி கதை ;) ) அதுனால நம்மள நம்பி வண்டி ஏற ஆளு இல்ல ;) .

சைனா பஸ் இங்கிருந்து போகுதுன்னு கேள்விப்பட்டு டிக்கட் பதிவு பண்ணிட்டோம். பயணம் நன்றாகவே இருந்தது ஆனால் 9 மணி நேரம் பயணம் செய்து 3 மணி நேரம்தான் நயாகராவைப் பார்க்க முடிந்த்தது.

சரி நான் இந்த பதிவு எழுதியதின் முக்கிய நோக்கம் நயாகராவைப்பற்றி எழுதுவது அல்ல, அந்தப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை எழுதவே. நான் இங்கு எதைப் பார்த்தாலும் நம் ஊரோடு தான் ஒப்பிடத் தோன்றுகிறது. அடிப்படையில் இங்கு உள்ள அனைத்தையும் அப்படியே நம் நாட்டில் எதிர் பார்ப்பதோ , ஒப்பிடுவதோ தவறு. இங்கு உள்ளதைப் பார்த்து நம் நாட்டில் எப்படி மாற்றலாம், மேம்படுத்தலாம் எனும் நோக்கத்தோடுதான் பார்ப்பதே சரி.

நயாகரா அருவி போல நம் நாட்டிலும் பெரிய அருவிகள் இருக்கிறது. கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி அருவி ஒரு எடுத்துக்காட்டு.. கீழே உள்ள படம அதிரப்பள்ளி .ஒப்பிட்டு பார்க்க நயாகரா ..


இன்னும் எழுத ஆசை .. எழுதி முடிக்க வருசமாயிடும் ;) அதனால் இது பாதி(வு) ..

நானும் தமிழ்99 இ-கலப்பைக்கு மாறிவிட்டேன். ;) அடுத்த பதிவு முழுதும் தமிழ்99ல் ...

சிவாஜி - இவ்வளவு புகழுக்கு தகுதியுடையதா ?

அநேகமாய் பல புள்ளி விவரங்கள் .. சாதனைகளாக மாற்றப்பட்டாகிவிட்டது .. சிவாஜிக்கு. எல்லாம் மீடியா , இணையம் , நம் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் காரணம் இவை தான். படமும் typical ரஜினி படம் தான். இன்னும் நாம் எதிர்பார்ப்புகள் வைத்து ஏமாந்த்ததிற்குக் காரணம் சங்கர். அவரும் அவர் பங்குக்கு சுஜாதாவின் உதவியுடன் சி.பி.ஆர். , system software architecht, self destructive program என்பதை எல்லாம் தமிழ் உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொல்ல வரும் கருத்து எனப்பார்த்தால் கடைசியாய் வரும் money card. சங்கரின் பிரம்மாண்டத்திற்கு கண்ணாடி செட்டிங், ரஜினியின் மேக்கப். அந்த 250 கோடி என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ இல்லையோ மென்பொருளாளர்கள் என்றால் வீட்டு வாடகை முதல் ஆட்டோக் கட்டணம் வரை இனி பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே மிக அதிகம்;(


1. முதலில் வியாபாரம். ஏ.வி.எம். நிறுவனத்தாருக்கு நன்றாகவே தூக்கம் வந்திருக்கும் என நினைக்கிறேன். வெளியீடு தள்ளிப்போன நாட்களைத்தவிர ;)


2. மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்த படம். அதற்கு காரணமே ரஜினி , சங்கர் என்ற பின் பலம்தான். அவர்களுக்காக படம் ஓடும் என்ற அசராத நம்பிக்கை!


3. உலக அளவில் அரங்கு நிறைவு காட்சிகள். இதற்கு முக்கியக் காரணம் நம் தமிழ் மக்கள் உலகம் முழுதும் பரவி இருப்பது, மீடியா , இணையம் போன்றவை. நானும் என் பங்குக்கு 1 வாரம் கழித்து(வெளியான முதல் சில தினங்கள் டிக்கட் கிடைக்கவில்லை) 1 மைல் தூரத்தில் இருக்கும் திரையரங்குக்குச் சென்று நன்றாக ரஜினியை நக்கலடித்துவிட்டு வந்தேன். நம்ம ஊரில் செய்தால் கட்டுகளோடுதான் வீடு திரும்பியிருக்க வேண்டும் :) .

இதனால் தமிழ் சினிமா உலக அளவில் புகழ் பெறத்துவங்கி விட்டதா ?? கதை , தரம் எனப்பார்க்கும்போது இல்லை என்பதே பதில். வியாபார நோக்கம் , புகழ் எனப் பார்க்கும்போது இன்னும் சில முன்னேற்றம் தேவை.

விளம்பரப்படுத்தி hype உருவாக்கி இருப்பது நல்ல வியாபார நோக்கம். பல நூறு திரையரங்குகளில் வெளியிட்டு சில தினங்களில் பணம் பண்ணியது சாதுர்யம்.

முக்கியமாக திரை அரங்குகளில் படத்தை ஆங்கிலத் துணைத்தலைப்புடன் (English Subtitle) வெளியிட்டிருந்தால் தமிழ் தெரியாதவரும் வந்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதுவே நான் பார்க்க வராததற்குக் காரனம் என என்னுடன் வேலை செய்யும் ஒரு வட இந்திய நண்பர் சொன்னார். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! பெரும்பாலான வட நாட்டினர் நம்மைக் கீழ்த்தரமாகவே எண்ணுகின்றனர். அது ஒரு தனிச் சண்டை. இணையத்தில இந்தி-தமிழ் , ரஜினி-அமிதாப் என ஒப்பிட்டு எதிர் விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கிறது.வெளிநாடுகளில் வெளியிடப்படும் இந்தித் திரைப்படங்கள் எல்லாம் ஆங்கிலத் துணை எழுத்துக்களோடுதான் வருகிறது. பாலிவுட் திரைப்படங்கள் ஐரோப்பவிலும் , பிற நாடுகளிலும் புகழடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

துணைத்தலைப்பு இல்லாமை போன்ற சிற்சில குறைகளைத்தவிர சிவாஜி புகழையும் , இலாபத்தையும் ஈட்டிய ஒரு படம்.

இந்தக் குறைகளை நீக்கி , சிவாஜியின் விளம்பர , வியாபார யுக்தியைப் பயன்படுத்தினால் தசாவதாரம் நம் சினிமாவை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என நம்பலாம்.