சிவாஜி - இவ்வளவு புகழுக்கு தகுதியுடையதா ?

அநேகமாய் பல புள்ளி விவரங்கள் .. சாதனைகளாக மாற்றப்பட்டாகிவிட்டது .. சிவாஜிக்கு. எல்லாம் மீடியா , இணையம் , நம் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் காரணம் இவை தான். படமும் typical ரஜினி படம் தான். இன்னும் நாம் எதிர்பார்ப்புகள் வைத்து ஏமாந்த்ததிற்குக் காரணம் சங்கர். அவரும் அவர் பங்குக்கு சுஜாதாவின் உதவியுடன் சி.பி.ஆர். , system software architecht, self destructive program என்பதை எல்லாம் தமிழ் உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொல்ல வரும் கருத்து எனப்பார்த்தால் கடைசியாய் வரும் money card. சங்கரின் பிரம்மாண்டத்திற்கு கண்ணாடி செட்டிங், ரஜினியின் மேக்கப். அந்த 250 கோடி என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ இல்லையோ மென்பொருளாளர்கள் என்றால் வீட்டு வாடகை முதல் ஆட்டோக் கட்டணம் வரை இனி பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே மிக அதிகம்;(


1. முதலில் வியாபாரம். ஏ.வி.எம். நிறுவனத்தாருக்கு நன்றாகவே தூக்கம் வந்திருக்கும் என நினைக்கிறேன். வெளியீடு தள்ளிப்போன நாட்களைத்தவிர ;)


2. மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்த படம். அதற்கு காரணமே ரஜினி , சங்கர் என்ற பின் பலம்தான். அவர்களுக்காக படம் ஓடும் என்ற அசராத நம்பிக்கை!


3. உலக அளவில் அரங்கு நிறைவு காட்சிகள். இதற்கு முக்கியக் காரணம் நம் தமிழ் மக்கள் உலகம் முழுதும் பரவி இருப்பது, மீடியா , இணையம் போன்றவை. நானும் என் பங்குக்கு 1 வாரம் கழித்து(வெளியான முதல் சில தினங்கள் டிக்கட் கிடைக்கவில்லை) 1 மைல் தூரத்தில் இருக்கும் திரையரங்குக்குச் சென்று நன்றாக ரஜினியை நக்கலடித்துவிட்டு வந்தேன். நம்ம ஊரில் செய்தால் கட்டுகளோடுதான் வீடு திரும்பியிருக்க வேண்டும் :) .

இதனால் தமிழ் சினிமா உலக அளவில் புகழ் பெறத்துவங்கி விட்டதா ?? கதை , தரம் எனப்பார்க்கும்போது இல்லை என்பதே பதில். வியாபார நோக்கம் , புகழ் எனப் பார்க்கும்போது இன்னும் சில முன்னேற்றம் தேவை.

விளம்பரப்படுத்தி hype உருவாக்கி இருப்பது நல்ல வியாபார நோக்கம். பல நூறு திரையரங்குகளில் வெளியிட்டு சில தினங்களில் பணம் பண்ணியது சாதுர்யம்.

முக்கியமாக திரை அரங்குகளில் படத்தை ஆங்கிலத் துணைத்தலைப்புடன் (English Subtitle) வெளியிட்டிருந்தால் தமிழ் தெரியாதவரும் வந்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதுவே நான் பார்க்க வராததற்குக் காரனம் என என்னுடன் வேலை செய்யும் ஒரு வட இந்திய நண்பர் சொன்னார். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! பெரும்பாலான வட நாட்டினர் நம்மைக் கீழ்த்தரமாகவே எண்ணுகின்றனர். அது ஒரு தனிச் சண்டை. இணையத்தில இந்தி-தமிழ் , ரஜினி-அமிதாப் என ஒப்பிட்டு எதிர் விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கிறது.வெளிநாடுகளில் வெளியிடப்படும் இந்தித் திரைப்படங்கள் எல்லாம் ஆங்கிலத் துணை எழுத்துக்களோடுதான் வருகிறது. பாலிவுட் திரைப்படங்கள் ஐரோப்பவிலும் , பிற நாடுகளிலும் புகழடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

துணைத்தலைப்பு இல்லாமை போன்ற சிற்சில குறைகளைத்தவிர சிவாஜி புகழையும் , இலாபத்தையும் ஈட்டிய ஒரு படம்.

இந்தக் குறைகளை நீக்கி , சிவாஜியின் விளம்பர , வியாபார யுக்தியைப் பயன்படுத்தினால் தசாவதாரம் நம் சினிமாவை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என நம்பலாம்.

0 comments: