எல்லாரும் இந்த 'சில்லுனு' அப்படினு ஒரு தலைப்பை பயன்படுத்துறாங்க .. சரி நானும் அதே தலைப்புல ஒரு பதிவு செய்றேன் ... நான்
தீபாவளிக்கு 6 நாள் விடுமுறை எடுத்து சந்தோசமாய் எடுத்த படங்களை பகிர்ந்துகொள்ளவே ... இந்த பதிவு .... மழை வந்தால் சென்னை மக்கள்
படும் அவதியிலிருந்து சற்று இளைப்பாற ... நம்ம ஊருக்கு போவோம் வாருங்கள்.....
சொல்லுவாங்க...... சில சமயம் வெயில் அடிக்கும் .... அந்த வெயிலின் மஞ்சள் நிறம் ..... இதோ ....
அந்த மழை விட்டவுடனே ... செடியிலெல்லாம் அந்த மழைத்துளி இருக்கும் பாருங்க .. பாத்துகிட்டே இருக்கலாம் ....
இந்த மழை எல்லாம் நின்ன உடனே ... ஒரு கணக்கு போடுவோம் ... ஒரு ஒழவு (உழவு) மழை இருக்கும் .... இல்ல குட்டைல நல்லா தண்ணி
நிக்குது ... கொஞ்சம் அதிகமாவே இருக்கும் ... அதுக்கும் மேல ஒரு கணக்கு உண்டு... உரல்ல தண்ணி நம்பி நிறைய இருந்தா ... ஒரு ஒழவு மழை... நல்ல ஈரம் மண்ணுல இருந்தா டிராக்டருக்கு சொல்லி விதைக்கனும் ... .விதைப்பயிர் இல்லனா போய் வாங்கனும் ... விதைக்கலனாலும்
சும்மாவது உழவு ஓட்டி விடனும் .. இல்லனா களை அதிகம் ஆயிடும் .... சின்ன வயசுல அந்த டிராக்டர்ல சைடுல உகாந்துட்டு ஓட்டறதுனாலே
தனி பிரியம் ....
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போலாகுமா ???....
2 comments:
தனசேகார், ரொம்ப அழகா இருக்குதுங்க இந்தப் புகைப்படங்கள்!
தமிழ்மணத்தில் & தேன்கூட்டில் உங்கள் பதிவுகள் வருகின்றனவா? இரண்டிலும் மறுமொழி நிலவரமும் தெரியச் செய்யலாமே? இன்னும் அதிகமானவாகளைச் சென்றடையும். தேவைப்பட்டால் சொல்லுங்கள், ஜெயபாரதனுக்கும் ஆனந்துக்கும் நான் தொகுத்தனுப்பிய மடலை அனுப்பிவைக்கிறேன்.
நன்றி சேது..
ஆனால் நான் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை ;)
கொஞ்சம் நல்லா எழுத வந்த உடனே தேன்கூடு... தமிழ்மணம் .. போன்றவற்றில் உறுப்பினர் ஆகிறேன்...
Post a Comment