செவ்வாய், டிசம்பர் 09, 2008

உண்ணாவிரத அறப் போராட்டம்



இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி உண்ணாவிரத அறப் போராட்டம்

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை

நேரம்: காலை 08:00 - மாலை 06:00

இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல் அருகில். (கோயம்பேடு - அண்ணாநகர் மார்க்கம்)

OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.

இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நித்தம் இறக்கிறார்கள் அவர்கள்.

அடுத்த வேளை KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.

பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.

சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.

நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.
IT professionals and College students for Srilankan Tamils.

இலங்கை - சில உண்மைகள்

நமக்கு மிக அருகில் இருக்கும் இலங்கை பெயரளவில் ஒரு ஜனநாயக நாடு.

பெரும்பான்மையாக, சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடு. ""சிங்கள மொழிப் பேசும்

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையில் அதிபர், பிரதமர் முதலான உயர் அரசுப் பதவி வகிக்க

முடியும்'' என்று இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ளது. இதுவே, இலங்கையின்

நேர்மையற்ற ஜனநாயகத்திற்கு ஓர் உதாரணம். மேலும் இலங்கையில் 1970லிருந்து இந்த நிமிடம்

வரை தமிழர்கள் மீது உரிமை மீறல்கள் நடந்து வருகிறது. உலகில் பல நாடுகளிலும் அகதிகளாக

வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களே இலங்கை ஒரு இன வேற்றுமைக் காட்டும்

நாடு என்பதற்கு சாட்சி.

1. குண்டு வீச்சிக்கு அஞ்சி, தற்போது தமிழ் மக்கள் 2 லட்சம் பேர் வண்ணிக் காட்டுப்

பகுதியில் அகதிகளாக புகுந்துள்ளார்கள். அவர்கள் இலங்கை அரசு திறந்து

வைத்திருக்கும் முகாம்களுக்கு செல்லவில்லை என்பது சிந்திக்க வேண்டிய உண்மை.

2. இலங்கை இராணுவம் கடந்த ஓராண்டில் 1000 கிலோ எடையுள்ள 6000 குண்டுகளை

தமிழர் வாழும் பகுதியில் போட்டுள்ளது.

3. இன்று 5 லட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் 70,000

மேற்பட்ட தமிழ் பேசும் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

4. இந்நிலையில், இலங்கையில் .நா. தொண்டு குழுவினர், உலகச் செஞ்சிலுவை

சங்கத்தினர், நார்வே தூதுக்குழு முதலிய அனைவரையும் இலங்கை அரசு

வலுகட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டது.

5. இந்தியா தன்னுடைய நட்பு நாடாக கருதும் இலங்கை அரசின் இராணுவத்தால் இது

வரை நூற்றுக்கணக்காண இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

6. இந்திய அரசு இலங்கை அரசுக்கு ரேடார் வழங்குதல், இராணுவப் பயிற்சி மற்றும்

ஆலோசனை வழங்குதல் முதலிய பல்வேறு இராணுவ உதவிகளை செய்து வருகிறது.

ஈழத்தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட தமிழக மக்களின் எழுச்சி தொடரட்டும்!

இந்தியா இலங்கை அரசுக்கு தரும் இராணுவ உதவியை உடனே நிறுத்த வேண்டும்!

குண்டு வீச்சுக்கு அஞ்சி காட்டுக்குள் அகதிகளாக இருக்கும் 2 லட்சம் தமிழ் பேசும்

மனிதர்களின் உரிமை காத்திட உணர்வுகள் மக்கி போகாத இளைஞர்களின் கடமை என்ன ?


நன்றி: அனுப்பிய மயிலுக்கு !

சனி, ஜூலை 12, 2008

இரவு நேரம்



தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் இரண்டாவது முயற்சி.

இந்த முறை என் புதிய நிக்கான் டி 40 யின் உதவியுடன் .. !! வாங்கிய அடுத்த நாளே நயாகரா அருவியின் இரவு அழகு ! கொஞ்சம் மெருகேற்றம் செயப்பட்டுள்ளது ! வழக்கம் போல் ஆட்டோ மோடில் வைத்து எடுத்துவிட்டேன்:)

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

தனிமை

தனிமை



தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் முதல் முயற்சி.
பிற்தயாரிப்பு அதிகம் செய்யத் தெரியவில்லை. எனவே வெறும் வெளிச்சம் மற்றும் வண்ணச் சரிபார்ப்போடு நிறுத்திகொண்டேன்:)

திங்கள், ஜனவரி 14, 2008

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

நான் இல்லாமல் இந்த வருடமும் மாட்டுப் பொங்கல் :( சீக்கிரம் நான் வீட்டுக்கு வர ஆவலோடு காத்திருக்கிறேன். என் டைகர் நாய்க்குட்டி , ஆடு , மாடுகளும் தான் எனக்காக காத்திருக்கின்றன :)